ஒரு பெண்ணின் ஆசை இதுவா!

சாதாரணமாகவே பெண்களுக்கு ஒருபழக்கம் உண்டு.அவர்களுக்கு ஒரு அவசரமும் இல்லையென்றாலும்கூட தன் கணவன் தன்னருகிலேயே இருக்கவேண்டும்.

இரவு ஒன்பது மணிக்கு ஒரு நிமிடம் பிந்தினாலும் ஓராயிரம் தடவைகள் call பண்ணுவதும்.நிமிடத்துக்கு ஒருதடவை call செய்து எங்கநிக்கிறாய் என்று கேட்பதும் பெண்களுக்கே உரிய இயல்பு.

அதுவும் பிரசவகாலத்தில் சொல்லத்தேவையில்லை. எத்தனையாயிரம் பட்டங்கள் பதவிகள் பெற்றிருந்தாலும் ஒரு பெண் நேசிக்கும் உயர்வான நிலை என்பது தன் தாய்மைப்பதவி தான். ஒரு பெண்ணை உற்று அவதானியுங்கள் சாதாரணமாக நாட்களை விட கர்ப்பம் தரித்தநாட்களில் மெய்மறந்து கனவுகளில் மூழ்கியபடி தான் திரிவாள்.

நிறையப் பேர் சொல்வார்கள் கர்ப்பிணிகள் விதவிதமாக சாப்பிட விரும்புவார்கள் என்று. ஆனால் அதனைவிட அவர்கள் விரும்புவது விதம் விதமாய்  கனவுகாண்பதைத்தான். நாரியில் கைவைத்து வயிற்றைத் தள்ளியபடி பூக்களோடு பேசி தென்றலை, இரவை, நிலவை, இயற்கையை இரசித்து மகிழ்ந்திருப்பார்கள். ஒரு பெண் காதல் வயப்பட்ட காலத்தை விட கர்ப்பம் தரித்த காலத்திலேயே அதிகம் கவிதைகள் சொல்கிறாள் அதிகம் தனக்குள் பேசுகிறாள்.காதலிக்கும் காலத்தில் தன் காதலனின் கற்பனை உருவத்தோடு பேசுகிறாள்.கர்ப்பம்தரித்த காலத்தில் அவள் தன் காதலின் விம்பமான சிசுவோடு பேசுகிறாள்.

ஒரு கர்ப்பிணி அதிகபட்சம் தன் கணவனிடம் எதிர்பார்ப்பது என்ன?

தான் சுமக்கும் சிசு தன்வயிற்றில் எட்டியுதைப்பதை தன் கணவனுக்கு காட்டவேண்டும். கணவன் தன் வயிற்றில் காதை வைத்து சிசுவொடு செல்லமாய் கதைக்கவேண்டும் "டேய் அப்பாக்கு உதைஞ்சுவிடடா" என்று செல்லமாய் தன் சிசுவுக்கு சொல்லவேண்டும் என்பதைத்தான்.

கற்பகாலத்து முத்தம் தான் ஒரு பெண்ணுக்கு மிகப்பெறுமதியானது. அவள் இவ்வளவு காலமும் எந்த அங்கத்திலும் பெற்ற எப்பேர்ப்பட்ட ஆழமான முத்தமும் கர்ப்பகாலத்தில் கணவன் வயிற்றில் தரும் முத்தத்திடம் தோற்றுப்போகும். ஏனென்றால் கணவனின் அந்த ஒற்றை முத்தம் அவனுடைய காதலிக்கும் தன் காதலின் அடையாளமான சிசுவுக்குமானது...

இப்படி கணவனிடம் ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் இருக்கும் அவளின் கர்ப்பகாலத்தில் இறுதியானதும் விட்டுக்கொடுக்கமுடியாததுமான அவளின் பெரும் எதிர்பார்ப்பும் ஆசையும் எது தெரியுமா? குழந்தையை ஈன்று தன் கணவனின் கைகளில் கொடுத்து "அப்பாவ பாரு அப்பாவ" என்று சொல்லும் அந்தத் தருணம்தான்.

ஆனால் இந்தத்தருணத்தைக் கூட நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் விட்டுக்கொடுக்கும் ஒவ்வொரு போராளியினதும் இராணுவவீரனதும் மனைவிக்குத் தியாகி என்பதை விட உயர்வான ஒரு கௌரவத்தை கொடுத்தாலும் மிகையாகாது.

இந்த உலகின் மிகக்கொடூரமான தருணம் ஒரு இராணுவவீரனின் ஒரு போராளியின் கற்பிணிமனைவி தன் கணவனை அவன் மீண்டும் வருவானா இல்லையா என்றுகூடத் தெரியாமல் ஏக்கத்தோடு சிரித்தபடியே போர்முனைக்கு வழியனுப்பி வைக்கும் அந்தத் தருணம் தான்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top