கவிதை

இறப்புக்கும் பிடிக்காத பிறப்பு

வாழை இலை போல்

இவனது வாழ்வும் போல,

பயன் படும் வரை

போற்றப்படும்

பயன் தீர்ந்ததும்

தூற்றப்படும்....

கல், முள் குத்தாமல்

மண் சூடு தாக்காமல்

பாதம் தன்னை தாங்கும்

செருப்பிற்கு தரும்

இடம்தான்

இங்கு எனக்கும்...

அவமானங்கள் மட்டுமே

இவனது தோள்களை அலங்கரிக்கும்

நிராகரிப்புகள் என்றும்

நீங்காத இவனது சொத்தாகும்...

இயற்கையும் விரும்பாத

உருவம்- இவன்,

இறப்புகும் பிடிக்காத

பிறப்பு....!!

மண்ணுக்குள் புதையுண்ட வேர்..

பூக்களை கோர்த்து மறைந்த நார்..

பிறர் பசியாற இறக்கும் உயிர்..

இரவுக்குள் காணாமல் போன நிழல்..

ஏன் இத்தனை எதிர்மறை

எண்ணங்கள்...jQuery17108133882309722946_1600818482357

ஏன் இத்தனை விரக்தி

வரிகள்..??

என வினவும் நல் உள்ளங்களுக்கு

இது வெறும் வரிகளாக மட்டுமே

தெரியும்...

எனது உணர்வின் வலிகள்

அந்த இறைவனுக்கு மட்டுமே புரியும்..

இத்தனை சந்திதும்

நடக்கிறேன்

சிவன் அவன் பார்வையில்

நாள் ஒன்று எனக்கும் பிறக்கும்

என்ற நம்பிக்கையில்

என்றும்...என்றென்றும்...

ஜீவன்❣️


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top