கவிதை

முதுமை

"உன் கடைசி மூச்சு நிக்கையில

என் உசுரும் போயிடுமே.."

கண்ணானக் கற்பகமே

கைவிட்டுப் போவாயோ !

நீ போனா யாரெனக்கு

கையோட என்னையுமே

கூட்டி நீயும் போவனம்மா..

குறுங்கி நீ தூங்கையிலே

மனமெல்லாம் துடிக்குதம்மா..

குப்பை மேட்டிலெல்லாம்

குப்பையோடு குப்பையாக

கூனிக் குறுகி இருக்கையில

நெஞ்செல்லாம் எரியுதம்மா..

பூவும் பொட்டுடனும்

நீ விட்டுச் சென்றாலும்

உடன்கட்டை ஏறிடுவேன்

ஏற்றுக்கொள்ள வேண்டுமம்மா..

உனைப் பிரிந்து வாழமாட்டேனம்மா..

என் ஐயா கலங்காதே

கடைசி மட்டும் வருவேன் ஐயா

கொஞ்சம் தலை சுத்துதையா

தண்ணி கொஞ்சம் வேணுமையா..

நாவும் வறண்டு போகுதையா..

இதற்குமேல் எழுத முடியவில்லை உறவுகளே..

தாய் தந்தையரை 

கடைசி வரை

கண்கலங்காது காப்பாற்றுவதே 

இப் பிறவியின் பலனாகும்..

இல்லையென்றால் பாழாகும் வாழ்வு.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top