என் பாசத்தின் பரிபாஷைகளை
புரிந்து கொள்ளாதவர்கள் தான் ...
என் மெளனத்தின் மொழியை
அறிந்து கொள்ளப் போகிறார்களா?
என் பரிவின் பிரியத்தை
உணர முடியாதவர்கள் தான் ...
என் பிரிவின் தகிப்பால்
துடித்துவிடப் போகிறார்களா?
என் அருகாமையை
தவிப்பவர்கள் தான் ...
என் இல்லாமைக்காக
தவிக்க போகிறார்களா ?
என் இருப்பை
விரும்பாதவர்கள் தான் ...
என் இறப்புக்காக
வருத்தப்படப் போகிறார்களா?
நான் சொல்லாமல் போய்விட்டால்
திரும்பி வந்துவிடுவாளோ என்ற
நினைப்பில் என் இருப்பை
உறுதி செய்ய முயல்வார்களேயன்றி...
நான் இல்லாமலே போய்விட்டால்
எவரும் என்னை எண்ணி
வேதனைப்படப் போவதில்லை!!!
அதுதான் நான் இருக்கும் போதே
இல்லாமல் என்னை உணரவைத்த
வார்த்தைகள் இங்கே இருக்கிறதே!!!
அனுபவப்பட்ட வாழ்க்கை இருக்கிறதே!!!
என் இறப்பிற்காக எவரும்
தயவுசெய்து அழுது
தொலைத்துவிடாதீர்கள்....
எனக்காக யாரும் நீலிக்கண்ணீர்
வடிப்பதையும்....
போலி நாடகம் போடுவதையும்...
இருக்கும் போதே
விரும்பாதவள் நான் ....
இறந்த பின்பு மட்டும் எனக்கெதற்கு!!!மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
lanka4youtube